இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 21 December 2018

The wild pear tree

கல்லூரி முடிந்து ஊர் திரும்பும் மகனிடம் அடுத்த திட்டம் பற்றி கேட்கிறார் அப்பா. எழுத்தாளனாக வேண்டி பதிப்பகத்தாரனுடனும் பிரபல எழுத்தாளனுடனும் சக வயது தோழர்களுடனும் உரையாடுகிறான். சூதாடியான தந்தை ஊர் முழுவதும் கடன் வைத்து தன் ஆசிரியர் பணி போக வார இறுதியில் மலையில் எஞ்சியிருக்கும் நிலத்தில் ஆடுகளுடன் வாழ்ந்தபடி இருக்கிறார். அப்பா மேல் மதிப்பேதும் இருப்பதில்லை அவனுக்கு. அவனுடனான தத்துவ விவாதத்தில் அனைவரும் முரண்படுகின்றனர். உலக இயல்பின் லயத்தில் வாழ்பவர்களுடன் உடன்பட முடிவயில்லை அவனால். ஒரு வழியாக தன் முதல் புத்தகத்தை அச்சிட்டு கடையில் கொடுத்து சில காலம் கழிந்து போய் பார்த்தால் ஒரு பிரதி கூட விற்காததால் அவைகளை அகற்றி விட்டிறுக்கிறார் கடைக்காரர். அவ்விடம் வெகுஜென எழுத்தாளனின் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. துயரும் வெருமையும் சூழ செய்வதறியாது தன் தந்தை வாழும் மலைக்குடிலுக்கு செல்கிறான். அவர் தன் நண்பனென மகன் எழுதிய புத்தகமான ' The wild pear tree ' யை காட்டுகிறார். தன் முதல் வாசகனை கண்டடைகிறான். இலட்சியவாதம் தன்னை கைவிட்ட கதையை கூறுகிறார் அப்பா. அடுத்த நாள் காலை கடும்பனி சூழலில் கண் விழித்து ஆடுகளுக்கு உணவளித்து மகனை தேடுகிறார். அப்பா கிணற்றுக்காக வெட்டிய குளிக்குள் அவரால் தூக்க முடியாத அப்பெருங்கல்லை உடைத்துக் கொண்டிருக்கிறான் மகன்.

188 நிமிடங்கள் மெதுவாக நகரும் இந்த துருக்கி படத்தை நம்மால் முழுதாக பார்க்க முடியுமானால் அந்த இளைஞனின் அகமும் புறமும் நம்மை முழுவதுமாக ஆக்கிரமிக்கும்.

No comments:

Post a Comment