இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Saturday, 22 December 2018

A 12 year night


சிறைச்சாலைகளின் வதையை ஆன்ம பலமாக மாற்றிக்கொண்டு மேம்பட்ட புது மனிதராக விடுதலையாவோர் பற்றி எடுக்கப்பட்ட சில சிறந்த படங்கள் Shawshank Redemption, The unburried man, The papillon. அவ்வரிசையில் உருகுவே நாட்டின் 'A 12 year a night ' படமும் இடம்பெறுகிறது. உருகுவே நாட்டின் இடதுசாரி கொரில்லா போராளிகள் மூவரை இராணுவம் கொள்ள முடியாததால் அவர்களை பயித்தியமாக்கும் பொருட்டு பனிரெண்டு ஆண்டுகள் தனி அறையில் இருட்டில் தனித்தனியாக சிறைபடுத்துகிறார்கள். அதில் ஒருவர் விடுதலையாகி 2010 ல் அந்நாட்டின் அதிபராகிறார். தனி மனிதன் தன்னுயிர் காக்க எந்தெந்த வகையில் போராடுவான் என்பதை மிகவும் ஆழமாக பதிவு செய்துள்ள படம்.

மரணத்திற்கு முன் கடைசியாக ஒரு வரியில் ஓர் கவிதை சொல்வதானால் என்ன சொல்வாய் என மூவரில் ஒருவரை கேட்கிறார் சிறைக்காவலர்.
'துணை' (Companion) என்கிறார். விடுதலைக்குப் பின் அவர் ஒரு கவிஞராகிறார். இனொருவரின் தாய் தளர்ந்திருக்கும் தன் மகனிடம் 'முடிந்தவரை உன் எதிர்ப்பை காட்டு. உயிரோடு இரு. உனக்குள் இருக்கும் அந்த ஆற்றலை எவராலும் சிறைபடுத்த முடியாது ' என்கிறார். விடுதலையாகி வருகையில் மகனை கண்ணீர் மல்க கட்டி அனைக்கிறார்.

மனிதன் எச்சூழலிலும் உயிர் வாழத்தேவையான வழிவகைகளை தேடிக் கண்டடைந்து விடுகிறான். சிறைச்சுவரில் கைவிரல்களின் முட்டியால் தட்டி தட்டியே அடுத்தடுத்த அறைகளுக்குள்ளிருக்கும் இருவரும் அவர்களுக்கான மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். பனிரெண்டு ஆண்டுகள் இருட்டில் வாழ்பவர்களை அவ்வப்பொழுது சிறைகளை மாற்ற வேண்டி கண்களை கட்டி வெளியே அழைத்துச் செல்லும் போது ஒரு நிமிடம் மட்டும் கட்டை அவிழ்த்து விடுமாறு காவலர்களிடம் கெஞ்சிக் கேட்க அவிழ்க்கிறார்கள். சூர்ய ஒளியும் பரந்த வெளியும் பசுமையான அந்நிலப்பரப்பும் அக்கணத்தில் அவருக்குள் ஏற்படுத்தும் அவ்வுணர்வை அது எப்போதும் வாய்க்கப்பட்ட மனிதர்களுக்கு காணக்கிடைக்காத தரிசனம்.

A twelve year night is definetely a brilliant art work and a very disturbing movie which ll make the viewers to feel the spirit of individuals to survive to exist and to hold their lives.

**

No comments:

Post a Comment