இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Thursday, 27 December 2018

What will people say

 பாகிஷ்தானிய குடும்பம் நார்வேயில் வாழ்கிறார்கள். வீட்டுக்குள் பாரம்பரியம் கடைபிடிக்கும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு வெளியே தனக்கு இனக்கமான நார்வே நாட்டு பெண்ணாக சுதந்திரத்துடன் வாழும் மகள். ஓர் இரவு தன் அறையில் ஒரு இளைஞனுடன் மகள் இருப்பதை பார்க்கும் தந்தை பதறிப்போய் பாகிஸ்தானிலுள்ள மலைக்கிராமத்தில் தன் உறவினர் வீட்டில் மகளை விட்டுச் செல்கிறார். கைபேசி இணையம் எல்லாம் மறுக்கப்பட்ட அக்கிராமத்தில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு பின்பு அச்சூழலுக்கு பழகி அங்கு உறவுக்காரப் பையன் ஒருவனுடன் நெறுக்கம் ஏற்படுகிறது. இருவரும் முத்தமிடும் சமயம் உள்ளூர் போலீஸாரிடம் மாட்டிக் கொள்ள நார்வேயில் இருக்கும் தந்தைக்கு அழைப்பு வருகிறது. மீண்டும் மகளை நார்வேவுக்கு அழைத்துச் செல்ல விமான நிலையம் போகும் வழியில் மலை உச்சியில் காரை நிறுத்தி மகளை இறங்கச் செல்கிறார் தந்தை.

 இரு வேறு கலாச்சாரங்களின் தொடர் மோதுதல் தலைமுறைகளின் இடைவெளி மனிதனின் அடிப்படை சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடுகளுக்குமான எல்லைகளின் ஊடாட்டம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவில் ஆதிக்கம் அத்துமீறல் சார்ந்து விழுமியங்களை நிர்ணயிப்பதிலுள்ள சிக்கல் என இரு துருவங்களும் பினைந்தும் மோதியும் இனைந்தும் விலகியும் செல்லும் இப்பயண முடிவு மிகக்கச்சிதம்.

**

Sunday, 23 December 2018

At War

Intense french film on protest of labourers against the factory owner's decision of closing the factory inspite of profitable business. It resembles ken loach's film language. But it missed to hold the viewers attention coz of too much of unbreakable dialogues and tight close ups. The tears rolling over the cheeks of the labour leader in the extreme tight shot on his way to factory before he is going to make a bold action is shocking n touching.

**

Saturday, 22 December 2018

A 12 year night


சிறைச்சாலைகளின் வதையை ஆன்ம பலமாக மாற்றிக்கொண்டு மேம்பட்ட புது மனிதராக விடுதலையாவோர் பற்றி எடுக்கப்பட்ட சில சிறந்த படங்கள் Shawshank Redemption, The unburried man, The papillon. அவ்வரிசையில் உருகுவே நாட்டின் 'A 12 year a night ' படமும் இடம்பெறுகிறது. உருகுவே நாட்டின் இடதுசாரி கொரில்லா போராளிகள் மூவரை இராணுவம் கொள்ள முடியாததால் அவர்களை பயித்தியமாக்கும் பொருட்டு பனிரெண்டு ஆண்டுகள் தனி அறையில் இருட்டில் தனித்தனியாக சிறைபடுத்துகிறார்கள். அதில் ஒருவர் விடுதலையாகி 2010 ல் அந்நாட்டின் அதிபராகிறார். தனி மனிதன் தன்னுயிர் காக்க எந்தெந்த வகையில் போராடுவான் என்பதை மிகவும் ஆழமாக பதிவு செய்துள்ள படம்.

மரணத்திற்கு முன் கடைசியாக ஒரு வரியில் ஓர் கவிதை சொல்வதானால் என்ன சொல்வாய் என மூவரில் ஒருவரை கேட்கிறார் சிறைக்காவலர்.
'துணை' (Companion) என்கிறார். விடுதலைக்குப் பின் அவர் ஒரு கவிஞராகிறார். இனொருவரின் தாய் தளர்ந்திருக்கும் தன் மகனிடம் 'முடிந்தவரை உன் எதிர்ப்பை காட்டு. உயிரோடு இரு. உனக்குள் இருக்கும் அந்த ஆற்றலை எவராலும் சிறைபடுத்த முடியாது ' என்கிறார். விடுதலையாகி வருகையில் மகனை கண்ணீர் மல்க கட்டி அனைக்கிறார்.

மனிதன் எச்சூழலிலும் உயிர் வாழத்தேவையான வழிவகைகளை தேடிக் கண்டடைந்து விடுகிறான். சிறைச்சுவரில் கைவிரல்களின் முட்டியால் தட்டி தட்டியே அடுத்தடுத்த அறைகளுக்குள்ளிருக்கும் இருவரும் அவர்களுக்கான மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். பனிரெண்டு ஆண்டுகள் இருட்டில் வாழ்பவர்களை அவ்வப்பொழுது சிறைகளை மாற்ற வேண்டி கண்களை கட்டி வெளியே அழைத்துச் செல்லும் போது ஒரு நிமிடம் மட்டும் கட்டை அவிழ்த்து விடுமாறு காவலர்களிடம் கெஞ்சிக் கேட்க அவிழ்க்கிறார்கள். சூர்ய ஒளியும் பரந்த வெளியும் பசுமையான அந்நிலப்பரப்பும் அக்கணத்தில் அவருக்குள் ஏற்படுத்தும் அவ்வுணர்வை அது எப்போதும் வாய்க்கப்பட்ட மனிதர்களுக்கு காணக்கிடைக்காத தரிசனம்.

A twelve year night is definetely a brilliant art work and a very disturbing movie which ll make the viewers to feel the spirit of individuals to survive to exist and to hold their lives.

**

Friday, 21 December 2018

The wild pear tree

கல்லூரி முடிந்து ஊர் திரும்பும் மகனிடம் அடுத்த திட்டம் பற்றி கேட்கிறார் அப்பா. எழுத்தாளனாக வேண்டி பதிப்பகத்தாரனுடனும் பிரபல எழுத்தாளனுடனும் சக வயது தோழர்களுடனும் உரையாடுகிறான். சூதாடியான தந்தை ஊர் முழுவதும் கடன் வைத்து தன் ஆசிரியர் பணி போக வார இறுதியில் மலையில் எஞ்சியிருக்கும் நிலத்தில் ஆடுகளுடன் வாழ்ந்தபடி இருக்கிறார். அப்பா மேல் மதிப்பேதும் இருப்பதில்லை அவனுக்கு. அவனுடனான தத்துவ விவாதத்தில் அனைவரும் முரண்படுகின்றனர். உலக இயல்பின் லயத்தில் வாழ்பவர்களுடன் உடன்பட முடிவயில்லை அவனால். ஒரு வழியாக தன் முதல் புத்தகத்தை அச்சிட்டு கடையில் கொடுத்து சில காலம் கழிந்து போய் பார்த்தால் ஒரு பிரதி கூட விற்காததால் அவைகளை அகற்றி விட்டிறுக்கிறார் கடைக்காரர். அவ்விடம் வெகுஜென எழுத்தாளனின் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. துயரும் வெருமையும் சூழ செய்வதறியாது தன் தந்தை வாழும் மலைக்குடிலுக்கு செல்கிறான். அவர் தன் நண்பனென மகன் எழுதிய புத்தகமான ' The wild pear tree ' யை காட்டுகிறார். தன் முதல் வாசகனை கண்டடைகிறான். இலட்சியவாதம் தன்னை கைவிட்ட கதையை கூறுகிறார் அப்பா. அடுத்த நாள் காலை கடும்பனி சூழலில் கண் விழித்து ஆடுகளுக்கு உணவளித்து மகனை தேடுகிறார். அப்பா கிணற்றுக்காக வெட்டிய குளிக்குள் அவரால் தூக்க முடியாத அப்பெருங்கல்லை உடைத்துக் கொண்டிருக்கிறான் மகன்.

188 நிமிடங்கள் மெதுவாக நகரும் இந்த துருக்கி படத்தை நம்மால் முழுதாக பார்க்க முடியுமானால் அந்த இளைஞனின் அகமும் புறமும் நம்மை முழுவதுமாக ஆக்கிரமிக்கும்.

Thursday, 20 December 2018

Climax

Death is an extrordinary experience

Life is a collective impossibility

If we tolerate watchn this psychedelic movie from d irreversible film maker gasper noe' surely there must be something wrong in the diagonal movement of this planet.

Woman at War

An absolute cinema experience. Stylish musical humanistic feministic n revolutionary film. Very good writing from Benedikt Erlinsson n Terrific acting from Halldora Geirhardsdottir. We would feel elated after watching this movie.

Tuesday, 18 December 2018

Yomeddine

இவ்வுலகு கெட்ட மனிதர்களால் சூழப்பட்டதா? ஆம். ஆமென்றால் நல்லவர்களே இல்லையா ? இல்லாமல் இல்லை. இங்கு உடலால் சபிக்கப்பட்ட மனிதர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா ? ஆம். அவர்களை அரவணிக்க யாருமே இல்லையா ? இல்லாமலிருந்தால் அவர்களால் இவ்வுலகில் உயிர் வாழ முடியாது. இவர்கள் அனைவரையும் சந்தித்து கடந்து போகும் பயணமே மனித வாழ்வு'.

இவ்வுண்மையை புயலைப்போல முகத்தில் அறையாமல் வெகு இயல்பாய் நம்முள் வருடிச் செல்கிறது இந்த எகிப்திய படம்.

Wednesday, 5 December 2018

விருதுகள்

ஆசான் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேரச் சென்றபோது எமக்கு கொடுத்த முதல் பணி அவ்வருடம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற திலகவதி அவர்களின் 'கல்மரம்' நாவலை திரைக்கதையாக எழுத வேண்டும் என்பதே.

இது..
கல்மரம் சார்.
இது..
இந்த வருஷம் சாகித்ய அகாதெமி விருது வாங்கிருக்கு.
இது..
கட்டடத் தொழிலாளர்களோட வாழ்க்கையப் பத்தினது.
ஏறெடுத்துப் பார்த்தவர்,
"திரைக்கதையா எழுதிட்டு வரயா.."

மூன்று நாட்களுக்குப் பிறகு சென்றேன். இப்போது இயக்குநர்களாக இருக்கும் பாலு சாரின் உதவி இயக்குநர்கள் சூழ அக்கதையை சொல்லச் சொன்னார். அரைமணி நேரம் கழிந்த பின் கன்னத்தில் கையூன்றியபடி இருந்தவர் மெல்ல நிமிர்ந்து

" உஸ்... டீ சாப்டலாம்டா. "

அனைவரும் களைய "நல்லா சொல்றடா. I like ur narration "
" Thank u sir "
"But.. நீ எப்டி சொன்னாலும் இந்த கதைல ஒன்னுமே இல்லயேப்பா "

அப்பொழுது தான் நான் சற்றே ஆசுவாசப்பட்டேன்.

"yes sir. நானும் அதான் feel பண்ணேன். But நீங்க சொன்னதால இதுக்குள்ள தேடித்தேடி நல்லா சொல்லிடனும்னு.."

" இந்த திலகவதி ரொம்ப அன்பான பொண்ணுப்பா. 'அண்ணா.. சாகித்ய அகாதெமி விருது வாங்கியிருக்கற என் நாவல படிச்சு பாருங்க. நீங்க படமா எடுத்தா பெருமையா இருக்கும்ணா' ங்கறா. அதான்.. "

மௌனமாக யோசித்தபடி இருந்தவர் தேநீர் வந்ததும் ஒருக்க சிப்பி நிமிர்ந்து உட்கார்ந்தபடி திடமாகச் சொன்னார்,

"..But ஒருத்தர் அன்பா இருக்காங்க ங்கறதுக்காக படம் எல்லாம் எடுக்க முடியாதில்ல " என்றபடி சட்டென எழுந்து நடக்கலானார்.

**

இலக்கியம் சினிமா அறிவியல் விஞ்ஞானம் லொட்டு லொசுக்கு எல்லாம் மானுட வாழ்க்கைக்கே. விருது வாங்கட்டும் வாங்காமப் பொகட்டும். எம் கடன் பணி செய்து கிடப்பதே.

எஸ்.ரா. அவர்கள் நல்ல எழுத்தாளர்.

***

ரித்விக் கட்டக் - யமுனா ராஜேந்திரன்






கட்டக்கின் அனைத்து படங்களையும் அவர் வாழ்வையும் முன்வைத்து அக்கால கலை அரசியல் மற்றும் சமூகப் போக்கை நுட்பமாக பதிவு செய்துள்ளார் யமுனா ராஜேந்திரன். கட்டக்கை பற்றி முழு புத்தகம் பதிப்பித்த அருண் மோ' வின் பணி போற்றத்தக்கது. இக்காலத்து அரசியல் சூழலிலும் மானுட விடுதலையை நோக்கிய கட்டக்கின் பார்வை கச்சிதமாகப் பொருந்துவதை விலாவரியாக விவரித்துள்ளார் யமுனா. காலஞ்சென்றாலும் தன் படைப்புகளின் மூலம் நீடித்து நிற்கும் அம்மகத்தான கலைஞனுக்கும் அதை தற்காலத்தில் அறிமுகம் செய்து கொண்டாடும் கலை ஆர்வளர்களுக்கும் நன்றி.

( கவணிக்க : படச்சுருளில் வந்துள்ள இக்கட்டுரை, கடைசி பக்கங்கள் இல்லாததால் முழுமையடையவில்லை.)

Bernaldo Bertolucci

நம்முள் நம் கலையுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய சில கலை ஆளுமைகள் இருப்பதையே மறந்திறுக்கும் சமயம் ஒருவர் இருந்து இன்று தான் இறந்தார் என அறியும் போது மனம் கனக்கிறது. இனம்புரியா வெறுமை ஆட்கொள்கிறது.

The great artist 'the dreamer' bernaldo bertolucci fell into permanant sleep to dream forever.