இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 12 September 2018

வாழ்வும் சாவும் 😂

டிஷ்கவரி புக் பேலஸ் நடத்தி வரும் அயல் சினிமா என்னும் சினிமா பற்றிய மாத இதழுக்காக தோழர் வேடியப்பன் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். ' மரணத்தை நோக்கிய பெருவாழ்வு' என்ற தலைப்பில் வயோதிகத்தில் வரும் மரண பீதியை கையாண்ட உலக திரைப்படங்கள் மற்றும் கலையையும் மானுடத்தையும் ஆழமாக நேசித்த இயக்குனர்களான தர்க்கவ்ஸ்க்கி பெர்க்மன் ஃபெலினி உள்ளிட்டோரையும் அவர்களின் படைப்புகளில் மேற்பட்ட கூறுகள் கையாண்ட விதம் பற்றியும் மரணத்தை எதிர் நோக்கி இருப்பினும் தான் வாழும் இடத்தை ஒரு பள்ளியாக சமூகக் கூடமாக பாவித்து தன் இருப்பை அர்த்தப் படுத்தி வாழ்ந்து வரும் பேரறிவாளன் போன்றோரை முன்னிறுத்தியும் எழுதி அனுப்பியிருந்தேன். இதழ் வெளியாகிய பின் பார்த்தால் பாலுமகேந்திரா படத்துடன் 'பெருவாழ்வு கண்ட மரணங்கள் ' என்றிருக்கிறது.

இத்தலைப்பில் கட்டுரையின் மைய கரு சிதைந்து முற்றிலும் மாறுபட்ட கோனத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கட்டுரையின் மையம் மரணத்தை பற்றியதல்ல. வாழ்க்கையை பற்றியது. அதுவே ' மரணத்தை நோக்கிய பெருவாழ்வு'.

***

@€£₹₩#$ॐ

சரவணா ஸ்டோர்ஸில் ஆடித் தள்ளுபடியில் 192 பக்க long size நோட்டு வெறும் 25 ரூபாய் என பார்த்ததும் பரவசமாகி எடுத்து பில்லுக்காக க்யூவில் நின்றபோது மஜித் மஜிதியின் படத்தைப் பற்றிய கட்டுரையை மொபைலில் டைப் செய்து கொண்டிருந்தேன். கவுண்டர் வரும்போது தான் உணர்ந்தேன் அந்த நோட்டுப் புத்தகம் இனி தேவையில்லாத ஒன்றென்று. நாம் டிஜிட்டல் வயப்பட்டு வெகு காலமாகிறது. நமக்கு பிடிக்குதோ இல்லையோ தேவையோ தேவையற்றதோ நவீனமயமாக்கம் தன் வலையில் நம்மை கேட்காமலேயே நம்மை சிறைபடுத்திவிடுகிறது.

இனி என் தனிப்பட்ட அடையாளம் என் கையெழுத்து என ஒன்றில்லை. கூகுள் ஃபான்ட்(font) தான் நம் அடையாளம். Whatsapp facebook email இவைதான் நம் பொதுப்பண்பு. ஒத்தையடிப் பாதைகளும் மண் சாலைகளும் அழிந்து தேசிய நெடுஞ்சாலைகள் வருகிறது.

இந்தியா எனும் நாட்டிற்காக தமிழ்நாடு கேரளம் மராட்டியம் போன்ற கையெழுத்துகள் அழிந்து வருகிறது.

என் பேனா என் கண்ணெதிரிலேயே என் விரல்களை விட்டு நழுவிப் போய்விட்டது. தற்போது என் விரல் நுணிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இப்பதிவை டைப் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்து உங்கள் விரல்களும் துடிக்கும். லைக் கமண்ட் ஷேர்.

***

Tuesday, 4 September 2018

Beyond the clouds - Majid Majidi

Very upset from the great director. The cast and pronounciation of tamizh people esp. the old lady in this film is horrible. We can neglect these mistakes if great indian directors like manirathnam did this in his films like guru and ravanan. How could majid majidi do this. In ravanan we could see tamizh wedding ceremony(nellai)behind konark sun temple and much more.

Majid majidi should learn from film makers like louie malle who did a documentary on india 'phantom India'. He did research from kashmir to kanyakumari for one year. In chennai he had captured kalakshetra as well as kasi medu. That should be the duty of a responsible artist. Sorry sir.

We could get the glimpse long back when we heard that majid majidi joined hands with ar rahman. Popcorn and kalla chutney is a bad combo. Both has unique properties.

Ar rahman has only two hands and both his hands were engaged with two oscars long back. How can he work with that and what for..

The spirit of rahman lies in 90's and that of majid majidi lies in Baran children of heaven and and all his earlier works.

***

Thursday, 30 August 2018

'மேற்குத் தொடர்ச்சி மலை'

 படத்தையும் இயக்குனரையும் நாம் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நணபர் விஜய் சேதுபதியைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. 'பீட்ஷா' வுக்கு முன்பு நண்பன் ஈட்டி பட இயக்குனர் ரவிஅரசு மூலம் அறிமுகமானவர் விஜய். 'களரி' (தற்போது கிருஷ்னா நடித்து ஓடிக்கொண்டிருக்கும் படமில்லை) என்ற கதையை அவரிடம் சொன்னதும் "இது உலகத்தரங்க. இதுக்குள்ள காமெடி வைங்கன்னோ இல்ல வேற எதாவதோ சொல்லியோ நான் கெடுக்க விரும்பல. எனக்கு என் அப்பா ஞாபகம் வருது" என்று கூறியவர் அடுத்த சில மாதங்களில் பெரிய உயரத்திற்கு சென்று விட்ட போதிலும் முதல் சந்திப்பில் எப்படி பேசினாரோ அப்படியே சில வருடங்கள் கடந்த பின்பும் பேசுகிறார். வெவ்வேறு இடங்களில் சந்திக்கும் போதும் அதே தன்மையுடன் உண்மையாக பேசுகிறார். "ஆமா என்ன ஆச்சி அந்த கத. வேற எதும் மூவ் பண்ணீங்களா" வெற்றி சாரின் தயாரிப்பில் எடுக்க இருந்த கதையைக் கேட்டு கருத்து கூறுவார். ஊக்குவிப்பார். தனி அறையில் பார்த்த அதே மனிதனைத் தான் மேடைகளிலும பார்க்கிறேன்.

இன்று இப்படத்தை தயாரித்து பார்த்த பிறகு தனக்கு பிடிக்கவில்லை என்றும் ஆனால் எல்லோரும் பார்த்து பாராட்டும்போது தன்னுடைய ரசனையையும் அறிவையும் மறுபரிசீலனை செய்ததாகவும் இம்மேடையில் பேசுகிறார். இந்த குணமே விஜய் சேதுபதி. வியாபாரிகள் தங்களுக்கு எது நம்பிக்கை அளிக்கிறதோ அதையே மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்கிறார் தயாரிப்பாளர் விஜய். இது மிக முக்கியமான கருத்து. இப்படம் எடுப்பதிலும் வெளிவருவதிலும் இருந்த நெருக்கடிகளையே இப்படி கூறுகிறார் சேது. தமிழ் நாட்டில் இப்பண்புகளுடன் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இருப்பார்களேயானால் பல பிரம்மாக்கள் கோபி நயனார்கள் லெனின் பாரதிகள் மூலம் தமிழ் சினிமா உலகத் தரத்தை அடையும். 

Monday, 27 August 2018

தமிழினி வசந்தகுமார்

நேற்று கடைசி நாள் புத்தகத் திருவிழா. மழை வேறு.வேகவேகமாகச்கை சென்று கைக்கு கிடைத்த சிலவற்றை வாங்கிக் கொண்டருக்க தமிழினி வசந்தகுமார் அவர்களை சந்தித்தேன். தோண்றியது கேட்டேன்.

" சார் நான் பாலு மகேந்திரா அசிஷ்டன்ட்"

"ஆங்"

சற்றே ஏமாற்றம் தான். அதை உணர்ந்தவராக

"ஒக்காறுங்க தம்பி. சொல்லுங்க"

" சாரப்பத்தி எனக்கு அவருடனான அனுபவத்த எழுதியிருக்கேன். யமுனா ராஜேந்திரன் சுபகுணராஜன் ன்னு சில ரைட்டர்ஸ் அத புத்தகமா கொண்டவந்தா நல்லாருக்கும்ணு சொன்னாங்க. அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு.."

" பாலுமகேந்திராவ ஒரு டைரக்டராவே பாக்கலங்க தம்பி நான். எனக்கு அவர் படங்கள் பிடிக்காது"

"எனக்கும் பிடிக்காதுங்க. இது அவர் ஆளும பத்தின.."

"என்ன ஆளும அவரு. தவறா எடுத்துக்காதீங்க. Sergio leone ஐ பிடிச்ச டைரக்டர்னு சொல்றவர என்னன்னு சொல்றது. அதே இத்தாலில முக்கியமான பல இயக்குனர்கள் இருந்தாங்க. சரி, leone யயாவது தன் படங்கள்ல முயற்சி பண்ணாறா. அவருன்னு இல்ல மொத்த தமிழ் சினிமா மேலயே எனக்கு கோவம் இருக்கு. வீணடிச்சிட்டாங்க."

"உண்ம தான் சார். ஆனா அப்பப்ப சில.."

" ஹெர்ஸாக் பத்தின புத்தகம் போடறேன். நான் எப்படிங்க உங்க குருநாதர பத்தி. மறுபடியும் தப்பா எடுத்துக்காதீங்க"

"நீங்க இந்த சம்பிரதாயத்த விடுங்க. Herzog. என்னுடைய குரு."

"அவரையே முழுமையான டைரக்டர்னு சொல்லமாட்டேன். Masters நெறய பேர் வெளிய தெரியறதில்ல " என்றவாறு எஸ். ஆனந்த் எழுதிய புத்தகத்தை எடுத்து வந்தவர்
"இதுல யாராவது ஒஙகளுக்கு தெரியுமா பாருங்க "

"கடைசியா இறுக்கறவர தவிர எல்லாருடைய படங்களும் பாத்திருக்கேங்க."

" Murnau.."
" Silent film legend sir. எப்படி விடமுடியும்."

" Carl theodar dreyer ? "
" The passion of joan of arc. "

ஏறெடுத்துப் பார்த்தவர் " Leni riefenstahl. அவங்கள தெறிஞ்சிருக்கும். Kenji mizoguchi. Jean Renoir ? "
" La grand illusion."

அதற்கு மேல் கேட்கவில்லை.
" சார். உங்க ஆதங்கம் புரியுது. Recent
ஆ தமிழ் படங்கள் எதாவது "
" நான் படம் பாத்தே பதினைந்து வருஷமாகுதுங்க தம்பி "

இருவரும் மௌனிக்க..

"நான் selective ஆ சில classic literary works அ போட்டுகிட்டு வர்றேன். அது போதும் எனக்கு. பாப்புலர் பிகர்ஸ் பத்தி புத்தகம் போட்டு அது நெறய விக்கணும்னு எல்லாம் ஆச கெடயாது எனக்கு"

"புரியுதுங்க. Masaki Kobayashi. Zoltan fabri. இந்த list ல இவங்க தான் தெரியாதவங்களா இருக்காங்க. Mozart டோட quotes அ தனதாக்கி தன்ன அடையாளப்படுத்துவாரு பாலு சார். 'I may be a vulgar man. But my art is not' ன்னு. அத விசாரணைக்குள்ளாக்கறது தான் நான் எழுதன கட்டுரைகளோட நோக்கம்."

சட்டென எழுந்து சென்றவர் 'கோபயாஷி' பற்றி எஸ். ஆனந்த் எழுதிய புத்தகத்தை எடுத்து வந்து

"இது உங்களுக்கு என்னுடைய அன்பளிப்பு. படிச்சி பாருங்க. நுட்பமான கலைஞன்."

புரட்டிக்கொண்டிருக்கையில் மகன் இரண்டு புத்தகங்களை எடுத்து வந்தான். Uncle Tom's Cabin. அவனை ஏறெடுத்து பார்த்தவர் " தமிழ் சினிமாவ நம்பி இருக்கீங்க. இப்படி இருந்தா எப்படி தம்பி. பையன். குடும்பம்.. "

அக்கணம் கலந்துரையாடிய எங்கள் இருவரின் பார்வைகளும் அதுவரையிலான உரையாடலுடைய பேசுபொருளின் மையம் தொட்டு வெடித்துச் சிதற அலையலையாக விரிந்துச் சென்று மறைந்தது நிதர்சனம்.

சிரித்தபடி புத்தகத்தை புரட்டினேன். மிகவும் சினேகத்துடன்,

"சினிமா சார்ந்து தீவிரமா எதாவது எழுதினா வாங்க. கண்டிப்பா நாம புத்தகமா கொண்டு வரலாம்."
" Definite ஆ எழுதறேங்க.."
" டீ எதாவது சாப்டறீங்களா.."
புன்னகையுடன் கிளம்ப
" தம்பி. ஒங்க குருநாதர பத்தி பேசனேன்னு கோவிச்சிக்காதீங்க."

அன்புடன் விடைபெற்றோம்.





Sunday, 5 August 2018

Break down reviews 3 - jaya letchmi selvaraju

After the Breakdown, short film screening  last sunday, most of them had a question. How do we connect to nature in our busy life? Well, let me ask u a question. How many of u, took the time to look outside ur window and admire the moon? Isn't moon part of the nature?

I always have this habit of admiring the full moon. Today, I saw a full moon and was admiring its beauty, when something strike me. Let me for a change, admire the star instead.

I zoomed my camera towards the twinkle twinkle little star. Guess what, I am totally amazed by God's creation. I could see the star sparkling and spinning. I got no words to explain my feeling but the scene was amazing. I tired to capture it for u.

My video is not that clear, but i really hope it brings joy and happiness for all my love ones. May the positive vibes spread to u all. Love u all and enjoy.💐😘😍


Break down reviews 2- karthik arunumar

கனவுத்திரை-மூன்றாம் நிகழ்வு

         “கனவுத்திரை” மூன்றாம் நிகழ்வு இனிதே நேற்று நடந்தது.எதிர் பாரத எண்ணிக்கையில் கூட்டம்.சீன,மலாய் சமூக மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

                 குறும்படம் “பிரேக்டவுன்” திரையிடப்பட்டது.அதற்கு முன் “அனிமேஷன் திரைப்படம்” குறித்த பார்வையை தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ  அவர்கள் நகைச்சுவையுடன்,சுவைபட சிறுவர்களுக்கும் புரியும்படி எடுத்துக் கூறினார்.

         அதன் பின் திரு.பாலு மகேந்திரா மற்றும் வெற்றிமாறன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த  திரு Md.பசுபதி அவர்களின் “பிரேக்டவுன்” குறும்படம் திரையிடப்பட்டது.

         கதையின் “ஒண்லைன்” இதுதான்.உலகமயமாக்கலுக்குள் பின்னிப் பிணைந்த வாழ்க்கை வாழும் ஒருவன்  மனச்சோர்வு மிகுந்த ஒரு பணிச்சூழலில்,பணி  முடிந்து செல்லும் தருவாயில் வழியில் அவனது கார் ப்ரேக்டவுன் ஆகிறது.அதுவும் ஒரு நடுக்காட்டில்.இந்த சூழ்நிலையால் ஓரிரு நாள் அவன்  வாழப்போகும் வாழ்க்கையும், அந்த ஓரிரு நாளில் அவன் வாழ்ந்த வாழ்க்கை மீதான அவன் பார்வையும் என்னவாகிறது, என்பதையும்,கதையின் முடிவில் இயக்குனர் நாம் ஒவ்வொருவரும் நம் மீதே ஒரு கேள்வி கேக்கும் அளவுக்கு கதையை முடித்துள்ளார்.
 
                     மிகவும் எளிய இந்தக் கதையை இரண்டு முக்கிய கதாபத்திரங்களைக் கொண்டு மிக இயல்பாய் பார்வையாளனுக்கு சொல்ல வந்த விசயத்தைக் கடத்தியிருக்கிறார்.S.G.சிவா வின் நடிப்பு பிரமாதம் .அதைவிட அந்த வயது முதிர்ந்த கதாபாத்திரத் தேர்வு மிக அருமை.மிக மிக மிக மிக இயல்பாய் நடித்திருக்கிறார்.கண்டிப்பாக அவர் தொழில் முறை நடிகராக இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

                   படம் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் அதன் பின் சீராகச் செல்லும் நதியைப்போல் கதையின் போக்கில் சென்று எங்கும் உறுத்தாமல் யதார்த்தமாய் நிறைவடைகிறது.

                                     நிறைய இடங்களில் ஆசான் பாலுமகேந்திரா நினைவுக்கு வருகிறார்.கண்டிப்பாக
வெள்ளித்திரையில் இயக்குனர் பசுபதி அவர்கள் அழகியலுடன் கூடிய நல்ல கதையுடன் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
குறும்படம் திரையிடல் முடிந்து,அதே குறும்படத்தின் முதியவர் கேரக்டருக்கு வேறொரு பெரியவரை வைத்து எடுத்த நான்கு நிமிடக் காட்சியைக் காட்சிப் படுத்தினார்கள்.அந்தக் காட்சிகள் எல்லாம் மிக மிக அற்புதம்.அந்தப் பெரியவர் சொக்கலிங்கப் பாகவதரை நினைவு படுத்திச் சென்றார்.அந்த நான்கு நிமிடக்கட்சி மனத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

                                  வாழ்த்துக்கள் இயக்குனர் Md.பசுபதி,S.G.சிவா,ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் .

              திரையிடல் முடிந்ததும் கலந்துரையாடல் நிகழ்வில் பலரும் குறும்படம் குறித்தான தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.நிறைவான நிகழ்வாக கனவுத்திரை மூன்றாம் நிகழ்வு அமைந்தது.

நிகழ்வினை ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி.குறிப்பாக Vijay Sangarramu க்கும் மற்றும் அக்கா  Jaya Letchmi Selvarajuஅவர்களுக்கும்.