முதல்வன் படத்தில் ஒரு காட்சி. ஒரு நாளில் முதல்வராக ஒரு இளைஞன் செய்த சாதனையால் சிலிர்த்துப் போய் அவனை ஆட்சி அமைக்கக் கோரி ஆயிரக்கனக்கான மக்கள் அவன் வீடிருக்கும் சாலையில் காத்துக் கிடப்பார்கள். அச்சாதனையைச் செய்தவனோ அடிபட்டு மிதிபட்டு " நாலு இட்லி..புதினா சட்னி.." என்று TNPSC பரீட்சைக்கு படித்துக் கொண்டிருப்பான்.
துள்ளியமாக இதே நிலை தான் நேற்று என் நண்பனின் வாழ்விலும் நடந்தது. மனித குல வரலாற்றிலேயே முதன் முறையாக ஒட்டு மொத்த உலகமும் ஒன்றாய் சந்தித்துவரும் பேரிடரான கொரோனாவால் லட்சக்கணக்கான வாழ்க்கைகள் அழிந்து போய்க் கொண்டிருக்கும் சூழலில் பேருக்காக கேடயத்திற்காக பணத்திற்காக ஆர்வக் கோளாறினால் அறிவுப் பற்றாக்குறையினால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகள் மருந்துகள் செய்திகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
வசந்தகுமார் என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளன் உறுதியாக மேற்சொன்ன வகைகளில் சிக்காதவன். மூன்று தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்து வருபவர்கள் என்னும் புரிதலிலேயே இதைச் சொல்கிறேன். இரண்டாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு டபுள் ப்ரொமோஷன் செய்யப்பட்டவன், பத்து வயதிலேயே இரண்டு JK க்களையும் படித்தவன் ( தத்துவம், இலக்கியம்). பநிரெண்டு வயதில் ஃப்ராய்ட், பதினான்கு வயதில் குண்டலினி யோகம், பதினெட்டு வயதில் மருத்துவம், இருபதுகளில் விஞ்ஞானம், கனிதம், உலகப் பயணம், வான சாஸ்த்திரம், வந்தே மாதரம் என ப்ரோட்டான்ஸ் முதல் பிரபஞ்சம் வரையில் சகலத் துறைகளிலும் வேறூன்றியதால் தான் ஓரிரவில் இந்நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க முடிந்தது அவனால். பதினைந்து வருட காலம் வாழ்வை தவமாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வந்ததின் விளைவாகவே இது சாத்தியாமானது.
ஆரம்பத்தில் சொன்ன 'நாலு இட்லி புதினா சட்னி' என்பது இது தான். மார்ச் மாத இறுதியிலேயே கொரோனாவுக்கான மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிந்துரைத்தும் மந்திரிகள் அரசியல் பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் என கடந்த இரண்டரை மாத காலம் போராடியும் இந்த ஆய்வரிக்கையை எவரும் சீண்டக்கூட இல்லை. விஞ்ஞானத்தை வள்ளலார் வழியில் அனுகுபவன் வசந்த். வாடிய உயிர்கள் தீர்விருந்தும் செத்துக் கொண்டிருக்க செய்வதறியாது தவித்தவன் வழக்குப் பதிந்தான். நல்லதொரு தீர்ப்பும் வந்திருக்கிறது.
'இம்மருத்துவரின் ஆய்வரிக்கையை ஆராய்ந்து ICMR விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'
மருத்துவ தந்தை இப்போகிரேட்டஸை உள் வாங்கியவன் இன்று இட்லிகடை திறக்க (ஊத்தங்கரையில் ஒரு கிளினிக் திறந்து..) ஆயத்தமாகிறான். இந்நிலையில் தான் அத்தனை செய்தித் துரையும் அவன் வீட்டு முன்பு குவிந்தது.
'ரூ.1.20 க்கு ஒரு மாத்திரையா..?!'
ஆச்சர்யமும் பிரமிப்பும் நேற்றிலிருந்து பற்றி எரிகிறது மக்களிடம். வாழ்வின் உன்னதங்களும் தீர்வுகளும் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் தான் இருக்கின்றது. ஆனால் மனிதன் கூட்டாக குழுவாக நாடாக கண்டமாக அரசியல் பொருளாதாரம் மற்றும் பல துறைகளாக விரிந்து வளர்ந்து..உலகமயமாகி.. தனியார் மயமாகி.. தொழில்நுட்பம் பெருகி செயற்கை அறிவு வளர்ந்து.. கடைசியில் அத்தனை அசுர வளர்ச்சிகளும் தனி மனிதனை அவன் வாழ்வை செம்மை படுத்துகிறதா அல்லது செத்து மடியச் செய்கிறதா என்றால்.. சிறு பான்மையினர் ஒடுக்கப்பட்டு தனி அடையாளங்கள் அழிக்கப்பட்டு மனிதன் நடந்து நடந்து வாடி சோறின்றி நீரின்றி செத்த நாய்க்கறி தின்று..
வசந்தகுமார் போன்ற விஞ்ஞானிகள் ராஜா போன்ற மருத்துவர்கள் ரட்சகர்களாக மீட்பர்களாக இருந்தும் அவ்வாற்றல்கள் மானுடத்திற்கு பயனளிக்காது 'நாலு இட்லி புதினா சட்னி..' தேடிச் செல்ல நேரிடுகிறதே.. அதற்குப் பெயர் தான்..!
Note : Dr. Vasanthakumar Natesan's hypothesis has been analyzed and published in renowned medical journals and started conducting trials in three universities in united states of america !. In India..?!
**
https://youtu.be/8JUAc8VH5x0
https://youtu.be/clIyCDiUHp4
https://youtu.be/a-zlGTBid6Q

No comments:
Post a Comment