" பிறர்வாடப் பலச் செயல்கள் செய்து
நரைகூடிக் கிளப் பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையென " - வாழும்,
..மனிதர்பால் சூழும் அச்சம், மரண பயம். வயோகத்தில் சாக்காடு தன் கூப்பாடு கேட்டு அஞ்சுவர் அவர். அவ்விடத்தும் தானறியார் தன்னிலைக்குத் தானே காரணமென்று. வாழுங்கால் சகமனிதனை நேசித்து அனுசரித்து அரவணைத்து போக இவர்களால் முடிவதேயில்லை.
எவ்வுயிரும் தம்முயிராய் தாம்நாட வயோதிகமும் வரம் தானே ?
நண்பரிடம், எங்கள் இருவருடைய பள்ளி தமிழ் ஆசிரியர் ஒருவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
"அவர் முன்னப்போல இல்லடா.. ரொம்பவே மாறிட்டாரு. பாவம், எப்படியோ என் நம்பர தேடிப்புடிச்சி நேத்து என்ன கூப்பிட்டாரு, போயிருந்தேன். அவரப் பாக்கவே ரொம்ப அதிர்ச்சியா இருந்ததுடா " என்றேன்.
முதியவர்களிடம் முதிர்ச்சி கைகூடுமல்லவா ?
"போடா மசுரு. அந்தாளப் பத்தி எங்கிட்டப் பேசாதடா .. அவனாவது மாற்றதாவது..சாகும் போதும் யார் குடியையாவது கெடுத்துட்டுத்தாண்டா சாவான் அந்தாளு. இப்ப நெனைச்சாக்கூட பத்திகிட்டு வருது. அவன் செத்தாக்கூட ஆறாதுடா என் வலி"
என்று வன்மையாக தூற்றிக்கொண்டிருந்தார், நண்பர்.
( ஆசிரியரின் கடுமையான நடவடிக்கையால் பாதிக்கப் பட்டவர்களில் நண்பரும் ஒருவர்.)
நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் கோவம் அடங்கவேயில்லை.
ஏனோ, முதியவரை அவர் அப்படி தூற்றியதை என்னால் தாங்க முடியவில்லை.
தமிழையாவை சந்திக்க நேற்று அவர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.
எந்நேரமும் மிடுக்காக திறிந்த மனிதர் ஆடி அடங்கி அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் பகீரென்று ஆனது. உடல் தளர்ந்து,தோல் சுருங்கி நரைகூடி கிழப்பருவமெய்தி துவண்டு போய் அமர்ந்திருந்தார்.
நான் ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து பயந்து நடுங்கிய மனிதரா இவர். வாசலிலே உறைந்து நின்றேன்.
" டேய் ! வா ..வா .. வா.. உள்ளவா. எத்தன வருசமாச்சி பாத்து..உள்ள வாடா.."
தன் திறனால் அனைவரையும் சுண்டி இழுத்தவர். அபரிமிதமான ஆற்றல் வாய்ந்த கவிஞன். தான் கற்ற தமிழின் நுட்பங்களை கற்றுத்தருவதில் வல்லவர்.
" ஆ ன்னா ஆ வன்னான்னு உன் கையப் புடிச்சி கத்துத்தரமுடியுன்டா.. அவ்வளத்தான். மத்தபடி அதவச்சி ,
" நிற்பதுவே ..நடப்பதுவே ..பறப்பதுவே ..நீங்களெலாம் சொற்பணந்தான் .." ன்னு
கவிதைய நீ தான் எழுதணும் "
என்று, அவர் கற்றுத்தந்த கலை நுட்பங்கள் ஒவ்வொன்றும் என் மனதில் இன்றும் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது.
கலையின் நுட்பம் கற்றுத்தேர்ந்த அவர் கலையின் ஆதார சுருதியான அன்பை கற்கவில்லை.
கற்றுத்தர வருவதள்ளவே அன்பு.
எந்நேரமும் தன்னலம் பற்றியே வாழ்ந்தவர் எங்கள் ஆசான். இயற்கையை நேசிப்பவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இயல்பாக யாருடனும் இசைய மாட்டார். சந்தேகம்..அனைவரின் மீதும்
சந்தேகம்..கர்வம்..குரூரம்..உதாசீனம் என தன் வாழ்க்கையை மிகவும் சிக்கலாகிக் கொண்டவர்.
" என்னிட்டருந்து கவிதயை வெலக்கி வெச்சிப் பாத்தா நான் ஒண்ணுமே இல்லடா.."
என்று அகம் உணர்ந்தவராக அவரே பல முறை கூறி இருக்கிறார் .தன்னிலை அறிந்திருந்தும் தன் நடத்தையில் எவ்வித மாற்றத்தையும் காட்டாத அவருடைய வாழ்க்கை இன்றும் எனக்கொரு புதிராகவே உள்ளது.
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய மனைவி கையில் ஏதோ ஈரத்துணிகளை எடுத்தவாறு காயப்போட நடந்து வந்தார். அவரை கண்டு நான் எழ முயற்சிக்க என்னை கடந்து சென்றுவிட்டார் .
" அவளுக்கு உன்ன அடையாளம் தெரியாதுடா. அவளுக்கு அவ உண்டு ,அவ ராஜா உண்டு."
( ராஜா. அவர் மனைவி செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி. ஆசானின் மனைவி ஒரு இயற்கை பிரியை . பெரும்பாலும் அணில்கள், பூனைக்குட்டி, தன் வீட்டில் தான் ஆசையாய் வளர்க்கும் பூச்செடிகள் என அவர் உலகமே அவைகள்தாம்.)
"என்ன சொல்லி என்ன செய்ய ? காலம் போன பிறகு கவல பட்டு என்ன பண்ண முடியும். விதிடா .. யேன் விதி ..
வாழ்ற காலத்துல அவல வெச்சி ஒழுங்கா வாழாம உப்ப அதப்பத்தி பேச எனக்கு என்ன அருகத இருக்குது ? ..
போச்சிடா எல்லாம் போச்சி .ஒரே வீட்லத்தான் இருக்கறோம் . ஆனா நிம்மதி ? "
அவரே போட்ட காப்பியை ஆவிபறக்க இருவரும் பருகியவாறு அமைதியாக அமர்ந்திருந்தோம். ராஜா என் காலை தன் நாக்கால் வருட எங்கள் மௌனம் கலைந்தது.
"டேய்..! ராஜா..."
என தமிழய்யா அவனை தொட முற்பட,
அவர் மனைவி,
" ராஜா இது என்னடா இது.., வாசல்ல கோலத்துமேலயே இப்படி பண்ணி வச்சி இருக்கற ..? "
என்றவாறு, அவனருகில் வர.. ஆசான் ராஜா மீதிருந்த தன் கையை விலக்கிக்கொண்டார்.
" இது யார் தெரியுதா ? "
என அவரிடம் கேட்க.. என்னை உற்றுப் பார்த்தவர்..
தெரியவில்லை என்பது போல் தலையசைத்தார்.
" இவந்தான் நம்ம.."
என்று ஆசான் வாயெடுக்க.. சமயலறைக்கு சென்று விட்டார் அவர். ராஜாவும் அவர் பின்னாலேயே சென்று விட்டான்.
" இப்படித்தான்.. எதையும் கண்டுக்கறதில்ல..எதுவும் தெரியாது அவளுக்கு.. ப்ச் ..கல்யாணமான புதுசுல மொத மொத கடலப் பாத்து இதுதான் கடலா ..?
..ப்பா ..எவ்வளோ பெருசா இருக்குது . உலகத்தோட பெருசா இருக்குமோ - ன்னு ஆச்சர்யப்பட்டவ ,
...இன்னமும் அப்படியே இருக்கறா ..ப்ச்.. எல்லாம் போச்சி ..! "
பெருமூச்சுடன் கன்னத்தில் கை ஊன்றியவாறு ஒருமித்து ஆழ்ந்த மௌனத்தில் ஆள்கிறார.
நான் அறையைச் சுற்றிலும் பார்க்கிறேன். அவரும் மனைவியும் உள்ள இளவயது புகைப்படம் , தமிழய்யா தன் பேரனுடன் ஆசையாக விளையாடிடும் புகைப்படம் சுவற்றில் ஆணி அடித்து மாட்டப்பட்டிருந்தது. அவர் வாங்கிக் குவித்த விருதுகள் அழுக்கேறி மாடத்தில் கேட்பாரற்று கிடந்தது .
மௌனம் களைந்தவர் ,
" தெனம் காலைல எழுந்து வாக்கிங் போறேன் .
நானே டீ போட்டுக்கறேன். அப்பறம் அப்படியே ஏதாவது படிச்சிகிட்டு பொழுத போக்கறது....ரொம்ப சிரமமா இருக்குடா..
எப்பவும் பசங்கலோடவும் கூட்டத்தோடவுமே இருந்து பழகிட்டதால
இப்போ தனியா இருக்கவே முடியல..
ஒவ்வொரு நொடியக் கழிக்கறதும் ரணமா இருக்குது. யாராவது என்னத் தேடி வரமாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கும்.
சமயத்துல ரோட்ல போகும்போது யாராவது என்னப் பாத்து சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டா போதும்..அவ்வளோத்தான் மனசு அப்படியே பூத்துக்கும். அன்னைக்கு முழுக்க அத நெனச்சிகிட்டே ஓட்டிடுவேன் . "
நாற்காலியின் கைப்பிடியை தடவியவாறு நீண்ட பெருமூச்செறிகிறார் .
.
" எத்தன நாளைக்கு ? இந்த பாழாப்போன பக்கவாதம் வந்ததுல இருந்து ...பயமா இருக்குடா ! எப்ப சாவனோன்னு திக்கு திக்குங்குது..
அட அப்படித்தான் போனாலும் தூக்கவாவது நாலு பேரு வேணுமல்ல ? எங்க ரோட்லயெது போகும்போது பொட்டுனு போய்டுவனோன்னு பயமா இருக்குது ."
உதடு துடிக்க.. நாத்தழு தழுக்க.. கண்கள் கசிய..உடைந்து போனார். அவர் முகம் நோக்க இயலாதவனாக தலை தாழ்த்திக் கொண்டேன்.
அரை முழுவதும் எதிர்கொள்ளவியலா மயான அமைதி சூழ்ந்திருந்தது.
அறைக்குள் உறைந்திருந்த மௌனம் கலைத்தது சன்னல் வழி தாவி குதித்த அணில்.
வழிந்தோடிய கன்னம் துடைத்தவர்..
" இப்படி தாண்டா.. அடிக்கடி ஒடைஞ்சி போய்டுவேன்.
எதுக்கெடுத்தாலும் ச்சும்மா ச்சும்மா அழுதடறேன் பொம்பள மாதிரி..
சரி விடு கழுத .. ,என்ன உட்டா நாள் பூரா இப்படியே பெனாத்திட்டு இருப்பேன் ..
ஆமா நீ என்ன பண்ற ? ஏதோ ... "
என்று, தன் சுயம் மீட்டு மீண்டும் மிடுக்காக நாற்காலியில் நிமிர்ந்தமர்ந்தார்.
அதற்குப் பிறகு பழைய கதைகள்..நண்பர்கள்.. அவர் சந்தித்த பெண்கள்.. என அரட்டை நீடித்தது. அவரையும் மறந்து வாய்விட்டு சிரித்தவர் அவர் மனைவி ஒரு பாத்திரத்துடன் எங்களை கடந்து செல்ல தலை திருப்பியவாறு,
" ரொம்ப நாளாச்சிடா.." என்று மௌனமானார்.
சிறிது நேரங்கழித்து இருவரும் மொட்டை மாடி சென்று சற்றே இளைப்பாறினோம். சாயுங்கால சூரியன் இளஞ்சிவப்பில் ஒளிர தென்றலின் மெல்லிய வருடலில் நனைந்து கொண்டு நின்றோம். சுற்றிலும் மெளனமாக பார்த்தபடி நின்டிருந்தார் எங்கள் தமிழய்யா.
தளர்ந்த மனிதரைக் காண இயலாதவனாக ஆசான் பெருமைகளை பறைசாற்றி அவரைத் தேற்றிக் கொண்டிருந்தேன். (சற்று மிகையாகவே.)
என்ன செய்ய? அற்ப்பனானாலும் அவனும் அடிப்படையில் மனிதன் தானே ?
மனிதர் நோக மனிதர் பார்த்துக் கொண்டிருத்தல் மனிதம் அல்லவே ..!
" நேரங் கெடைக்கும் போது அப்படி வந்து போப்பா..ஆதரவா இருக்கும் "
என்றவரின் கண்களில் ஏக்கமும் பறிதவிப்பும் சூழ,
" கண்டிப்பா வறேன் சார்..."
என்றபடி விடைபெற்றேன்.
" முதும ஒரு முதிர்ச்சிய கொடுக்கத்தான் செய்யுதில்ல.. ? "
என்றேன் நண்பனிடம்.
" போடா மசுரு. வயசானவனெல்லாம் திருந்திட்டான்னா நாட்ல பாதி பிரச்சனைங்க தீந்து போகும்டா..
அந்தாளுக்கு நேத்து நீ சிக்குன. நொங்க சீவுற மாதிரி சீவிப்புட்டான் உன் மனச.. அவ்வளோத்தான் .
அந்தாளாவது திருந்தரதாவது..! "படுவான்டா.. உன்னம் நல்லா படுவான் ..!
நாலடியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது .
"கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கார் றுயரான் டுழவார்
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கார் பரிவ திலர் ".
அதாவது,
கரும்பின் சாற்றினால் ஆகவேண்டிய பயனைப் பெற்றபின் அதன் துரும்பு வேகக்கண்டு துன்பம் அடையாதது போல், தேகத்தின் பயனாகிய தருமத்தை சம்பாதித்த பின் மரணத்துக்கு பயப்பட மாட்டார்கள் விவேகிகள்.
தனிமையில் வெறுமை சூழ மரண பீதியில் செயலற்று அமர்ந்திருந்த எங்கள் தமிழய்யாவின் பிம்பம் என் சிந்தையுள் தோன்றி மறைந்தது.
*****
குறிப்பு :
( நாலடியார், விளக்கம் : புலியூர் கேசிகன் )
{ கூற்றம் வருங்கால் - எமன் வரும்போது }
..........***..........

பரவசத்தோடு வரவேற்றபடி எழ முற்பட்டார்.உறைந்திருந்த என்னை எதார்த்தம் அழைக்க திடுக்கிடவனாக ஓடிச்சென்று எழ முற்பட்டவரின் தோள்தொட்டு அமரச்செய்தேன். துவண்டுபோன அவர் தோள் தொடுகையில் ஏற்பட்ட உணர்ச்சி என்னை ஏதோ செய்தது.

No comments:
Post a Comment