இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 18 January 2012

Resurrection of a Prophet

The Prophet
The day of a prophet who is one among the few important souls( throughout the human history )who has been dedicate their life to lives around them ,i.e., for all the human kind, after leading a very stressful life and struggle to survive not only in his profession but for his life too. His turn starts NOW..

***

Sunday, 15 January 2012

Children of heaven

 
 
These are the children who made me feel jealous and they had triggered my nostalgia when i have visited the place where i had spent my entire childhood. It's Pambar Dam, in Krishnagiri district, Tamilnadu, India.

Notes :
               Camera - Samsung mobile camera.
               Resolution - 3.2 megapixels.

                                             ****

Freeze - Yelagiri (Hill Station)










 








 



 

 
                                                                              ****
 

 

 

Mise-en-Scene (Short Film)



This short film was not made on the basis of a script in hand. It happened as it was while i had been capturing the beauties of one of the important Kurinji land ( the hilly region ) of Tamilnadu called ' javvaadhu malai '. I couldn't give an apt title to this film as the sight and sound of it will induce something inside us and i consider that is more important than anything else.

Notes :
           * Camera - Samsung mobile (Wave -525)
           * Resolution - 3.2 megapixels.
          
                                    ****

Thursday, 5 January 2012

விபூதி பூஷன் ( சிறுகதை )

பத்ம பூஷன் ஆகணும்னு  நெனைக்கறவங்க  முதல்ல  விபூதி பூசனும். பத்ம பூஷனுக்கும் விபூதிக்கும் அப்படி என்னதான் தொடர்பு.

 இருக்கே...

"  புதன், சுக்ரன், ராகு, கேது, சனி  ன்னு  நவகிரகங்களும் சூரியனச் சுத்தி இருக்கற ஒன்பது கிரகங்கள்னு சின்ன பிள்ளையா இருக்கறப்ப  பாட்டி சொல்லி கேட்டிருக்கொம்ல.."

" சரி  விடு.இனியாவது ஒழுங்கா கோவிலுக்குப்  போய்
நவகிரகங்கள  சுத்தி வருவோம். "

" ஆமா. ஏதாவது ஒன்னு தேவைப்படுது . பக்தி, லட்சியம். இந்த மாதிரி எதையாவது பிடிச்சிக்க வேண்டியிருக்குனு  ' முடவன்  வளர்த்த வெள்ளைப் புறாக்கள்' - ல விமலாதித்ய மாமல்லன் கூட சொல்லிருப்பாரே. "

" அது சரி. நமக்கு பக்தியா, லட்சியமா..? "

" இதுல என்ன ஒனக்கு Confusion. எப்ப  நீ  ஒரு  விஷயத்த  Strict - ஆ Follow பண்ணிருக்க. ரெண்டும் தான். "

" ஆனா நாம பத்து வருஷத்துக்கு அப்பறம் இப்டி பட்ட அடிச்சிட்டு வெளியே போனா நம்ம நண்பர்களெல்லாம் என்ன சொல்வாங்க.."

" டேய். மத்தவனுக்காகவா வாழ்ற நீ..? "

" இல்லதான். ஆனா மதத்தவன தவிர்த்திட்டும் வாழ முடியாதில்ல. "

" ஆமா நீ எப்பதான் இப்டி பேசறத நிறுத்தப் போற. "

" இல்ல அதுக்கில்ல. பத்து வருஷமா வீட்ல அம்மா சொல்லியும் கேக்காதவன், Philosophy,Art, Film  அது இதுன்னு பெனாத்திட்டு இருந்தவன் திடீர்னு இப்படி கோயில் கொளம் பட்ட  லவங்கம்னு சுத்தனம்னா வீட்லயே  நம்ம 'Image' spoil ஆயிடும்ல,அதான்..  இனிமே Spoil ஆகறத்துக்குன்னு   ஒன்னியும் இல்லன்னாலும் நாம எப்படி நம்ம கெத்த  வுட்டுக் கொடுக்கறது. "

" அடப்பாவி. ஓன் நெலமைய பாத்தியா, பெத்தவங்க  கிட்டயே  நடிக்க  வேண்டியதாயிருச்சே. "

" ச்செ..ச்செ.. நடிப்பெல்லாம் ஒன்னும் இல்ல....   ல்ல நடிப்புதான். "

" ஆமா எதுக்கு இந்த நடிப்பு. "

" இல்ல. நாம ஒரு பாசக்கார பயன்னு தெரிஞ்சா மதிக்க மாட்டாங்கல்ல. அதான்,எதுக்கு நாம Express பண்ணிட்டுன்னு.."

" ஏண்டா  இப்படி ஆயிட்ட. எப்படிடா இப்படி ஆன. பட்ட அடிச்சி கோயிலுக்கெல்லாம் போய்..
 அட.. அவனால  கூட எதையோ Control பண்ண முடியலன்னு சொன்னப்ப.. பயப்படாதடா வா கடவுள் பாத்துப்பார்னு முருகர் கோயிலுக்கு கூட்டிகிட்டு போய் கற்பூரம் ஏத்தி  சத்தியம் பண்ண சொல்லி.. அட அந்த சம்பவத்த சொல்லிச் சொல்லி இன்னைய வரையில அவன் நம்மள அடிக்கிராங்கறது வேற கத. ( அந்த  வயசுல  அதெல்லாம் சகஜம்னோ இயல்புன்னோ சொல்லித்தர்ற பெரியவங்க யாரும் எங்களுக்கு அமயலங்கறது வேற கத. அத்த விடுவோம். இந்த கதைக்கு வருவோம்.  ) அதான் கோயிலுக்கெல்லாம் போய் நல்லா தான இருந்த.. "

" நல்லதோ கேட்டதோ நிம்மதியா இருந்தேன். எல்லாம் போச்சி. "

" என்ன போச்சி. எதும் போகல. எங்கயும் போகல. பட்ட அடிச்சா நல்லா Feel பண்ணுவன்னா அடி. அவ்ளோதான். "

" OK. But, Particular - ஆ ஒரு மதத்த Follow பண்றவன்னு  ஆயிடாதா. "

" யார்ரா சொன்னாங்க. மனுஷனா பொறந்த எல்லாரும் ஏதோ ஒரு அடையாளத்தோட தாண்டா வாழ வேண்டிருக்கு. மத்தவன அவமானப்படுத்தாம அவனோட உணர்வுகளையும்
மதிச்சம்னாவே போதும்டா. "

" அது OK. But சாமிங்கற Concept - இயே  மறுக்கறவங்கலாச்சே நாம.."

" அது இல்லன்னு எப்டி சொல்ற.."

" I mean Almighty instead of God."

" ஆங்....... அப்பறம்.  ஏண்டா..... ஏண்டா இப்டி வார்த்தைல மாட்டிட்டு வாழ்க்கைய Miss பண்ணிட்டயே.."
"  ச்சும்மா 'Miss' பண்ணிட்டேன்  'Miss' பண்ணிட்டேன்னு சொல்லாத.."

" சரி. 'Miss' பன்னல. நம்ம கைல தான் இருக்கு. 'Miss' பண்ணாம இருந்தா சரி. "

" கண்டிப்பா. ஆனா விபூதி பூசித்தான் அத காப்பாத்தனும்னு  இல்ல இல்லையா.."

" இல்ல."

" Good."

" இல்ல. அடிச்சித்தான்  காப்பாத்தனும்னு சொன்னேன்.

" ஏன் அப்டி சொல்ற."

" ஏன்னா.. விபூதி is not merely the representation of God or Spirituality or Religion. It's a symbol of Purity.. symbol of Innocence.. symbol of Hard work and the symbol of Dedication."

" சர்யாச்சொன்ன. அதான். அதே தான். ' SYMBOL OF PURITY ' . அந்த Purity - யத்தான்  தேடிட்டிருக்கோம்  ல்ல..."

" NOSTALGIA. பரிசுத்தத்த தேடி.. அதுக்காக ஏங்கறது .."

" ஞாபகம் இருக்கா. நம்ம குரு சொன்னானே ஒரு வாட்டி."

" என்ன."

" நாம மலையில கரஞ்ச  ரோட்டோர  பீ வாசம் பிடிக்கும்னு சொன்னப்ப.."

" Right. Right. Nostalgia. ' நீ சொல்ல வர்றது அந்த காலகட்டத்தோட ஒட்டுதல்னு தான் எடுத்துக்கணும்' னு சொன்னான். ப்பா.. வார்த்தைகளத் தாண்டி உள்ளுக்குள்ள போய் ஒருத்தன் என்ன நெனைக்கறான்னு சொல்லுவான்ல. மனுஷனே இல்ல அந்த தாயிலி."

" சரி மூடு. இப்ப நடக்கறது அவன் கத இல்ல."

" ஆமாமா. எதுல விட்டோம்."


" ஆங்.. நல்லா வருது வாயில. 'பீயில' டா."

" ஆங்.. அதான். அதாலத்தான் இனிமே நாம மூணு வேல குளிக்கறோம் ஆறு வேல பல் தேக்கிறோம். நீட்டா இருக்கறோம். OK.."

" Ok. But be Cautious that யாராவது  கேட்டா Immediate - ஆ சொல்லணும் 'IT'S A SYMBOL OF PURITY '- ன்னு "

" First 'INNOCENCE' - ன்னு  சொல்லேன்."

" ல்ல.. PURITY- யே இருக்கட்டும்."

" முடிக்கும் போது DEDICATION. "

" அட ராமா வாழ்க்க போதுடா டே.."

" ஹே.. இப்ப ராமான்னு சொன்னது கூட Genetical - ஆ Form ஆன ஒரு விஷயமாத்தான் இருக்கனும்ல.."

" இப்ப Scientist புழுத்தி   ஆயிட்டியா நீ."

" ஹேய்.. ஹேய்.. No bad words.."

" பின்ன  என்னடா  புண்ட. மனசுக்கு பட்டத செய்ய என்ன பிரச்சன ஒனக்கு. போலிடா நீ.
   YOU are a  P S E U D O .... "

" NO.. NO.... NO  P L E A se.."

" மனச உள்ளுணர்வ Follow பண்ணுவோம் இனிமே."

" நிச்சயமா.."

 என்றவாறு  பத்ம விபூஷன் வாங்க எத்தனிக்கும் எப்பேர் பட்ட கலைஞன் ஆனாலும் முதலில் விபூதி பூஷன் ஆகவேண்டும் என்ற புரிதலுடனும் சமாதானத்துடனும்  பட்டை அடித்து விநாயகர் கோயிலுக்குப் பொய் நவ கிரகங்களைச் சுத்திய அடுத்த நாள் அவன் திருப்பதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.


                                                *****